விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறி மற்றும் பழ வகைகளை இலவசமாக குளிர்சாதன கிடங்குகளில் வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான குளிர்சாதன கிடங்குகள் உள்ளன. அவை அனைத்தும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழ வகைகளை பாதுகாக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பிரேம்குமார் தமிழக அரசுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், விவசாயிகளின் விளைபொருட்களை பாதுகாக்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
விவசாய விளை பொருட்களை குளிர்சாதன கிடங்குகளில் எந்தவித வாடகை, மின்சார கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இதனை ஏற்று, தமிழக அரசு, விவசாயிகள் குளிர்சாதனக் கிடங்கை இலவசமாகப் பயன்படுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கே.பிரேம்குமார் கூறுகையில், தமிழக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அரசு அறிவித்துள்ள இலவச குளிர்சாதன சேமிப்புக் கிடங்கை
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் மிளகாய், தக்காளி, வாழை, தர்ப்பூசணி, முட்டைகோஸ், கொய்யா, திராட்சை உள்பட பல்வேறு காய்கறி மற்றும் பழ வகைகளை வீணாக்காமல் சேமிப்புக் கிடங்கில் சேமித்தும், வரும் காலங்களில் அவசர நிலையிலும், பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்க உறுதி செய்ய வேண்டும்.
மேலும், விவசாயிகளின் நலனை கருதி அவர்களது விளைபொருட்களை இலவசமாக குளிர்சாதன கிட்டங்குகளில் வைக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு காங்கிரஸ் சார்பில் நன்றி, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago