சிவகங்கை அருகே 1,000 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ கர்நாடக பொன்னி அரிசியை ஊராட்சித் தலைவர் வழங்கி வருகிறார்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அனைத்து தரப்பினரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலரும் வருமானமின்றி பசியால் வாடும் சூழல் உருவாகி இருக்கிறது. அவர்களுக்கு அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே மல்லாகோட்டை ஊராட்சித்தலைவர் விஜயலட்சுமிராதாகிருஷ்ணன் மல்லாக்கோட்டை, ஓடைப்பட்டி, சித்தமல்லிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ கொண்ட கர்நாடக பொன்னி அரிசி மூடை வழங்கியுள்ளார்.
மொத்தம் 963 குடும்பங்களுக்கு வழங்கி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார். அவரது செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், ‘ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் கர்நாடக பொன்னி அரிசி வழங்கினோம். பெரிய குடும்பங்களுக்கு கூடுதலாக ஒரு மூடையும் வழங்கினோம்,’ என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago