காய்கறிகள் விற்பனையில் ஏதாவது பிரச்சினையா?-விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

காய்கறிகள், பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்வதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள அவர்கள் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில்11520 ஹெக்டேர் பரப்பில் பழங்களும், 3380 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போது பெரும்பாலான காய்கறிகளும், பழங்களும் அறுவடைக்குத் தயாராகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இச்சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகலாம் என்று தோட்டக்கலைத்துறை விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறியதாவது:

காய்கறிகள் விற்பனையை எளிதாக்குவதற்கு, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படும் நேரடி விற்பனை மையங்கள், தோட்டக்கலைத்துறையில் மானியம் பெற்ற நடமாடும் காய்கனி விற்பனையாளர்கள் மற்றும் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர்குழுக்கள் வாயிலாக நடமாடும் காய்கனி விற்பனை நிலையங்களை இயக்கப்படுகின்றன. நுகர்வோருக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று நேடியாக நியாயமான விலையில் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு, விளைப்பொருட்களை அறுவடை செய்து விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி வேண்டிய உதவிகளைப் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய தோட்டக்கலை உதவி இயக்குநர்களின் செல்போன் எண்கள்;

1. மதுரை கிழக்கு 9345144646, 9865562664

2. மதுரை மேற்கு 9943055896, 9384729229

3. மேலூர் 9715662587, 94874 10112

4. கொட்டாம்பட்டி 8098293026, 8098293026

5. வாடிப்பட்டி 9843914366, 9843914366

6. அலங்காநல்லூர் 9443794779, 9443794779

7. செல்லம்பட்டி 9962666469, 9842164184

8. உசிலம்பட்டி 9962666469, 7200710711

9. சேடபட்டி 9786179469, 8946081812

10. டி.கல்லுப்பட்டி 9865705034, 9865705034

11. கள்ளிக்குடி 7598648493, 7598648493

12. திருமங்கலம் 9894105744, 9486907256

13. திருப்பரங்குன்றம் 9566333887, 9566333887

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்