தென்காசியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தென்காசியில் தொற்றின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த நன்னகரத்தைச் சேர்ந்த ஒருவரும், புளியங்குடியைச் சேர்ந்த ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 2 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 9 பேருக்கு, ரத்த மாதிரி சேகரித்து, பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அதில், நன்னகரத்தைச் சேர்ந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 834 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 163 பேருக்கு தொற்று உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago