ஊரடங்கு உத்தரவு காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 75 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர். நிபந்தனைகளுடன் மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 27 மீனவ கிராமங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதாழை முதல் கூட்டப்பனை வரை 9 மீனவ கிராமங்களும் உள்ளன.
இவைகளில் சுமார் 75 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஆங்காங்கே ஒருசில மீனவர்கள் மட்டுமே கடலுக்கு செல்கின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்க தலைவர் எஸ்.ஜே.கயாஸ் கூறும்போது, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஒரு மாதமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மீனவர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது.
எனவே, நடைமுறைக்கு சாத்தியமாகக்கூடிய நிபந்தனைகளுடன் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும், மீன்பிடிக்க செல்லாத ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோன்று மீனவர் சேமிப்பு நிவாரண நிதி விரைவாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago