சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாலைகளில் பிரம்மாண்டமான ஓவியம் வரைந்து கரோனா வைரஸ் தடுப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சிலர் தேவையின்றி சாலைகளில் நடமாடுகின்றனர்.
அவர்களுக்கு நூதன தண்டனை வழங்குவது, வழக்கு பதிவது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
» ஊரடங்கின் பாதிப்பை தவிர்க்க அனைத்து தரப்பினருக்கும் உதவி: மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் உறுதி
» சீசன் நேரத்தில் ஊரடங்கு: வாழ்வாதாரம் இழந்த ஏ.சி. பழுதுநீக்குநர்கள்
இருந்தும் நடமாட்டம் குறையவில்லை. இதையடுத்து மாவட்ட ஓவியர் சங்கம், போலீஸார் இணைந்து காரைக்குடி சாலைகளில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமாக கரோனா வைரஸ் ஓவியங்களை வரைந்துள்ளனர்.
அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை, தேவர் சிலை அருகே இதுபோன்று பிரமாண்டமான ஓவியங்களை வரைந்துள்ளனர்.
சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரையும், வீட்டை விட்டு வெளியே வருவோரையும் எச்சரிக்கும் விதமாக தெருவில் சுத்தாதே கரோனாவை வீட்டிற்கு கொண்டு வராதே, 144 தடை உத்தரவை மதிக்கவுடம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணியவும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும் போன்ற வாசகங்களையும் எழுதியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago