தில்லை தீட்சிதர்கள் ஏழைகளுக்கு அன்னதானம்: வீடு வீடாகச் சென்று வழங்கினர்

By கரு.முத்து

சிதம்பரம், தில்லை தீட்சிதர்கள் ஏழைகளுக்கு வீடு வீடாகச் சென்று அன்னதானம் வழங்கினர்.

உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் கரோனா காரணமாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்கள் வருவாய் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், கடுமையான விலையேற்றம் காரணமாகவும் அடித்தட்டு மக்கள் உணவுக்குத் தவித்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு இடங்களிலும் வறிய மக்களுக்கு, வசதியுள்ளவர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், அப்பகுதி மக்களுக்கு உணவு, கபசுரக் குடிநீர் உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இன்று மதியம் ஏழை மக்கள் வசிக்கும் கோவிந்தசாமி தெருப் பகுதிக்கு அன்னதானமும் வழங்கினார்கள்.

சமைக்கப்பட்ட உணவை வாகனத்தில் ஏற்றிச் சென்ற தீட்சிதர்கள், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்