கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் ஊராட்சியில் வீசிய சூறைக்காற்றில் 1300 நாட்டு வாழைகள் சூறைக்காற்றில் சாய்ந்து சேதமடைந்தன.
கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் ஊராட்சி தோட்டப்பாசனத்தில் வாழை, மக்காச்சோளம், சீனிஅவரை உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
குமாரகிரியை சேர்ந்த விவசாயி செ.காளிமுத்து, தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் கடந்த 2019-ம் ஆண்டு தை மாதம் 1600 நாட்டு வாழைக்கன்றுகள் வாங்கி நடுகை செய்தார். 15 மாதங்கள் கடந்த நிலையில் நாட்டு வாழைகள் குலைதள்ளிய நிலையில் காணப்பட்டன.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வீசி வரும் சூறைக்காற்றில் சுமார் 1300 வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து அகிலாண்டபுரம் கிராம நிர்வாக அலுவலர் கருத்தபாண்டி நேரில் வந்து சேதமடைந்து வாழைகளை பார்வையிட்டார்.
கயத்தாறு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து, சேதமடைந்து வாழைகள் குறித்து கணக்கெடுத்தனர்.
இதுகுறித்து விவசாயி செ.காளிமுத்து கூறும்போது, 2019-ம் ஆண்டு தை மாதம் ஒன்றரை ஏக்கரில் 1600 நாட்டு வாழைக்கன்றுகள் நடுகை செய்தேன். கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் திடீரென வீசிய மழையுடன் கூடிய சூறைக்காற்றில் 1300 வாழைகள் சேதமடைந்து விட்டன.
தற்போது ஒரு வாழை ரூ.300 வரை விற்பனையாகிறது. இந்த கணக்குபடி பார்த்தால் எனக்கு ரூ.3.90 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா வைரஸ் காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலை இருந்தது.
இதில், சூறைக்காற்றில் வாழைகள் சேதமடைந்துள்ளது. எனவே, தமிழக அரசு எனக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago