சிவகங்கையில் சர்க்கஸ் கலைஞர்கள், நரிக்குறவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வட்டாட்சியர், உதவி ஆய்வாளர்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சிவகங்கை நகர்ப்பகுதியில் உணவின்றி தவித்த சர்க்கஸ் கலைஞர்கள், நரிக்குறவர்களுக்கு வட்டாட்சியர், இன்ஸ்பெக்டர் உதவிக்கரம் நீட்டினர்.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஊரடங்கால் கிராமமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். வேலை செல்லாததால் கூலித் தொழிலாளர்கள் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

சிவகங்கை அருகே பழமலைநகரில் உணவின்றி சிரமப்பட்ட நரிக்குறவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உணவு வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக வெளியூர்களில் இருந்து சர்க்கஸ் கலைஞர்கள் 88 பேர் வந்திருந்தனர்.

திருவிழாவிற்கு தடை விதித்தநிலையில் உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வட்டாட்சியர் ரமேஷ் வழங்கினார்.

அதேபோல் சிவகங்கை அருகே பழமலைநகரில் 300 நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்கள் ஊசி, பாசி போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். ஊரடங்கால் உணவிற்கு சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் அவர்களுக்கு உணவு வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்