கேரளாவைப் போன்று தமிழகத்தில் அத்தியாவசிய மீன் உணவு தடையின்றி கிடைக்கும் வகையில் கட்டுமரம், மற்றும் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு, தெற்காசிய மீனவ தோழமை பொது செயலாளர் பாதிரியார் சர்ச்சில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கு அரசு போராடி வரும் வேளையில், மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான சமையல் பொருட்கள், காய்கறிகள், பால், மற்றும் மருந்து வகைகள் போன்றவை கிடைப்பதற்கு அரசு எடுத்துவரும் சீரிய நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்.
இதைப்போல் தமிழகத்தில் கன்னியாகுமரி உட்பட 13 கடற்கரையோர மாவட்டங்களிலும் மீன் அத்தியாவசிய உணவு பொருளாகும்.
கடலோர மாவட்ட மக்கள் தங்களது அத்தியாவசிய உணவான மீன் கிடைக்காததால் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். அண்டைய மாநிலமான கேரளாவில் மீன் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளனர்.
அதேநேரம் விசைப்படகுகளில் தங்கி மீன்பிடித்தலுக்கு தடை விதித்துள்ளனர்.
ஆனால் நாட்டுப்படகு, கட்டுமரங்களில் அன்றாடம் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். 1 முதல் 4 பேர் வரை மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இதைப்போல் தமிழகத்தில் வருவாய் இன்றி தவிக்கும் ஏழை மீனவர்கள் பயன்பெறும் வகையிலும், அத்தியாவசிய உணவான மீன் மக்களுக்கு தடையின்றி கிடைக்கவும் 13 கடலோர மாவட்டங்களிலும் கட்டுமரம், மற்றும் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க அரசு ஆணை பிறைப்பித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அனுமதி அளித்தால் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து நாட்டுப்படகுகளில் மீன்பிடிப்பதறாக மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் மீன் விற்பனையிலும் மீன்வளத்துறை நேரடியாக தலையிட்டு சமூக இடைவெளியுடன் நேரடியாக மீன்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ் அப் மூலமும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago