அரசின் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் விதிமுறைகளை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் 3549 பேர் மீது மீது இதுவரை 2219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களிடமிருந்து 2382 இருசக்கரவாகனங்கள், 34 நான்கு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொடக்கநாட்களில் போலீஸார் இருசக்கரவாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.
இருந்தபோதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல் பேகம்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இருந்தபோதும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், அதிக எண்ணிக்கையில் வெளியில் சுற்றுவது தொடர்கிறது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 3549 பேர் மீது 2219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களிடமிருந்து 2382 இருசக்கரவாகனங்கள், 34 நான்கு சக்கரவாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து தினமும் விதிமீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 23 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவையை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் கரோனா தொற்றில் மூன்று இடம் பெற்றுள்ளநிலையில் மூன்றாம்நிலையான சமுதாய தொற்று பரவாமல் தடுக்க திண்டுக்கல் மாவட்ட மக்கள் வெளிநடமாட்டத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் என மாவட்ட நிர்வாகம், போலீஸ்நிர்வாகம் சார்பில்
பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago