சிவகங்கை அருகே தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது அதை தடுக்க முயன்றபோது மாடு முட்டியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு கண் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்ததொரு பொதுநிகழ்ச்சியோ, விழாவோ நடத்த கூடாது.
ஆனால் சிவகங்கை அருகே கீழக்கோட்டையில் நேற்றுமுன்தினம் தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதையடுத்து மதகுபட்டி போலீஸார் அங்கு சென்றபோது வடமாடு மஞ்சுவிரட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். அப்போது மிரண்டு ஓடிய மாடு தலைமை காவலர் கனகராஜை (36) முட்டியது. இதில் அவரது கண் பாதிக்கப்பட்டது.
» சென்னை அருகே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பார்வையற்றவர்கள்: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கண் பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து 30 பேர் மீது மதகுபட்டி போலீஸார் வழக்கு பதிந்து 8 பேரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago