கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு துறைமுகத்திலேயே கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.
கரோனா பாதிப்பைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
படகுகள் அனைத்தும் துறைமுக தங்கு தளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் அறிந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கரைதிரும்பின.
» விளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண முடியாது; புதுச்சேரி முதல்வர்
» மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்; தடங்கலாக இருக்கக் கூடாது; ஜி.கே.வாசன்
அதே நேரம் குமரி மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதமே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைதிரும்பியவண்ணம் உள்ளன.
தற்போது தேங்காய்பட்டணம், மற்றும் கேரள கடல் பகுதிகளில் குமரி விசைப்படகுகள் கரைசேர்ந்த வண்ணம் உள்ளன. மேலும் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை நோக்கியும் விசைப்படகுகள் கரைதிரும்பி வருகின்றன.
பல வாரங்களாக கடலிலே தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டதால் கரைதிரும்பும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து மருத்துவ பரிசோதனையை அந்தந்த மீன்பிடி துறைமுகங்களிலே நடத்த வேண்டும். இதைப்போல் கரைதிரும்பும் விசைப்படகுகளில் உள்ள மீன்களை ஏலமிட்டு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
அல்லது அவற்றை பதப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மற்றும் மீன்வளத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி கூறுகையில்; கடந்த பிப்ரவரி மாதம் விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக் சென்றமீனவர்களின் ஒரு பகுதியினர் கரைதிரும்பி வருகின்றனர்.
கரோனா பாதிப்பு தொடங்கி வெகுநாட்களக்கு பின்பு கரைதிரும்புவதால் உடனுக்குடன் துறைமுக தளத்திலேயே அர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புனிதவெள்ளி, மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு வழக்கமாக ஆழ்கடல் தொழில் முடிந்து கரைதிரும்புவது வழக்கம். இதைப்போல் தொழில் முடிந்து 500 விசைப்படகுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்பி வருகின்றனர்.
இதில் ரூ.12 கோடி மதிப்பிலான மீன்களுடன் 100 விசைப்படகுகள் குமரிக் கடலின் மேற்கு கரையோரும் சேர்ந்துள்ளனர்.
மொத்தம் ரூ.70 கோடி மதிப்பிலான மீன்கள் விசைப்படகு மூலம் கரைசேரவுள்ளது.
இவற்றை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். தற்போதைய சூழலில் விற்பனை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகாத மீன்களைப் பதப்படுத்திப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago