தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு: ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று உறுதியானது

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களில் 3-வது நபராக ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இன்று ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் டெல்லி சென்று வந்தோர், அவர்களுடன் தொடர்பில் உள்ளோர் 73 பேர் என சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறைச் செயலாளார் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 541 பேர். 28 நாள் வீட்டுத்தனிமையில் இருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 54,315 பேர். இதுவரை சாம்பிள் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,248. இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 74. இந்த 74 பேரில் 73 பேர் டெல்லி சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். அவர் வெளிநாட்டிலிருந்து வந்தவருடன் தொடர்பிலிருந்தவர்.

இதன் மூலம் நேற்றைய எண்ணிக்கையான 411 பேருடன் இன்றைய தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 74 பேரையும் சேர்த்தால் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். மீதமுள்ளவர்கள் 63 பேர்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை (containment activities) அதிகப்படுத்தியுள்ளோம். தேசிய தொற்று நோயியல் மையம் (national institute of epidemiology) ஆராய்ச்சி மாணவர்கள் கொண்ட குழுவிடம் தொற்று நோயியல் ஆய்வு (epidemiological study) எடுக்கச் சொல்லி இருக்கிறோம். ஒரே சோர்ஸிலிருந்து எப்படி இது பரவியது என்பது குறித்து ஆராயக் கூறியுள்ளோம்.

வயதானவர்கள், குழந்தைகள், ரத்த அழுத்தம், நீரிழிவு இருக்கிறவர்கள் இன்னும் பாதுக்காக்கப்பட வேண்டும். தேனியைச் சேர்ந்த பெண்ணின் கணவர் டெல்லி பயணித்துத் திரும்பியவர். கணவர், மகன் இருவரும் பயணம் செய்திருந்தனர். அதனால் தேனியைச் சேர்ந்த பெண்மணிக்கு தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அதனால்தான் முதல்வர் உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள் என்று தெரிவித்திருந்தார். இது ஒரு உலகத்திற்கே சவாலாக இருக்கும் பயங்கரமான நோய். எப்போது என்ன ஆகும் என்று தெரியாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்பில் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு வந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காக்க முடியும்.

எங்கள் எண்ணிக்கையும் மாவட்ட எண்ணிக்கையும் மாறுவதற்குக் காரணம், தினமும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது. இதுவரை நாங்கள் பரிசோதித்த வீடுகள் 7 லட்சத்து 23 ஆயிரத்து 491. நாங்கள் 29 லட்சத்து 63 ஆயிரத்து 628 மக்களை அணுகியுள்ளோம். 11 ஆயிரத்து 270 களப்பணியாளர்கள் இதற்காகப் பணியாற்றியுள்ளனர். இந்த சோதனைகளை மேலும் அதிகப்படுத்துவோம். தினமும் அதிகப்படியாக இதுபோன்ற சோதனைகள் அதிகரிப்பதால் அந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

நாங்கள் பலரையும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். அவர்களில் பலர் 28 நாள் தனிமைக் காலத்தை முடித்துவிட்டனர்.

நாங்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். இதுவரை சிகிச்சையில் உள்ளவர்கள் சாதாரணமாக வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லாமல் தான் உள்ளனர். புள்ளிவிவரம் மாறி வருவதற்குக் காரணம், அடிக்கடி புதிய தகவல்கள் வருவதுதான். விரைவில் சரியான தகவல் அளிக்கிறோம்.

புதிய ஆட்களுக்கு பாசிட்டிவ் வருகிறது. அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் ஆகிறது. இப்படி மாற்றங்கள் அடிக்கடி வருவதால் இதுபோன்ற புள்ளி விவரம் மாறுகிறது. நாங்கள் பொதுமக்களிடம் வேண்டிக்கேட்டுக்கொள்வது எல்லாம் அரசின் அத்தனை துறைகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் கை கழுவுவது, சமூக விலகல், வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்”.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்