திருநெல்வேலியில் ட்ரோன் மூலம் கிருமி நாசனி தெளிப்பு பணிகளுக்கான ஒத்திகை நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இதை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
குறுகலான தெருக்கள், உயரமான கட்டிடங்கள், முக்கிய வீதிகள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் கூறியதாவது:
» நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த 38 பேருக்கு சிகிச்சை
» கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை: மும்மதத் தலைவர்களுடன் குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆலோசனை
திருநெல்வேலியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என 1100 பணியாளர்கள் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தூய்மைப்பணிகள் மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் விதமாக, ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்ல இருக்கிறோம்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 10 நிமிடத்திற்கு 1 முறை 10 லிட்டர் கொள்ளளவுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த இயந்திரமானது, பேட்டரி மூலமாக ரிமோட் கண்ட்ரோலில் இயங்கக்கூடியது என்று தெரிவித்தார். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago