வீட்டில் இருந்தவாரே முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் போன்ற பொருட்கள் குலுக்கல் முறையில் பரிசாக அளிக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுவரை 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு ரூ.2500 மதிப்பிலான 39 வகையான மளிகை பொருட்கள் இரண்டாயிரத்திற்கு வழங்கப்படவுள்ளது. 13 வகையான காய்கறிகள் ரூ.100 க்கு வழங்கப்படும்.
வீட்டில் இருந்தவாரே முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்படும் முதல் நபருக்கு பிரிட்ஜ், இரண்டாவது பரிசாக பீரோ இரண்டு பேருக்கும், மூன்றாவது பரிசாக குக்கர் மூன்று பேருக்கும் வழங்கப்படும்.
அம்மா உணவகத்தில் மூன்றுநேரமும் சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மைப்பணியாளர்கள் என 957 பேருக்கு தினமும் உணவுவழங்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு என்றால் உயிர்போகாது. அரசு சொல்வதை கேட்டால் எந்தபாதிப்பும் ஏற்படாது, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago