கபசுரக் குடிநீர் வாங்க சிவகங்கை அரசு சித்தா மருத்துவமனையில் குவிந்த மக்கள்

By இ.ஜெகநாதன்

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கபசுரக் குடிநீர் வாங்க சிவகங்கை அரசு சித்தா மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரழப்பு அதிகரித்து வருகிறது.

தடுப்பு மருந்து இல்லாததால் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கபசுரக் குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் நாட்டு மருந்து கடைகளுக்கு அலைந்து வருகின்றனர்.

இதையடுத்து சிவகங்கை அரசு சித்தா மருத்துவமனையில் தினமும் காலை கபசுரக் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கபசுரக் குடிநீரை வாங்க தினமும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி அருந்துகின்றனர்.

சிலர் பாத்திரங்களில் வாங்கி வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து சித்தா மருத்துவர்கள் கூறுகையில், ‘சித்தா மருத்துவத்தின் மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்து வருகிறது. கபசுரக் குடிநீர் வாங்க தினமும் 200-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்,’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்