கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் கூடுவதால் சமூக தொற்று பரவும் அபாயம் இருந்ததால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய மத தலைவர்களும் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இந்நிலையில், தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் அனுமதி இன்றி இன்று முஸ்லிம்கள் ஏராளமானோர் தொழுகைக்கு கூடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர் சண்முகம், காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் போலீஸார் அப்ழுகுதிக்கு விரைந்து சென்றனர்.
» தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகள் நிறுத்தம்: கடலோர மாவட்ட நேயர்கள் ஏமாற்றம்
ஐமாத் நிர்வாகிகளிடம் பேசி, அனைவரையும் வெளியே வருமாறு கூறினர். இதை ஏற்காமல் வாக்குவாதம் செய்து, நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதையத்து, அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
அப்போது, போலீஸாரிடம் சிலர் சிக்கினர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், காவல் ஆய்வாளர் உட்பட 2 போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால், தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago