ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் மத்திய சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ஏ.வெங்கடேசன் கூறியதாவது:
கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன
.இந்த ஊரடங்கு அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
அமைப்புசாரா தொழிலில் கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சவரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் என 107 விதமான தொழிலாளர்கள் வருகின்றனர். இவர்கள் தினமும் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும்.
மதுரை மாவட்டத்தில் மொத்த தொகையில் 70 சதவீதம் பேர் அமைப்புசாரா தொழிலாளர்கள் தான்.
வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை என்ற நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அமைப்புசாரா தொழிலாளர்களை காப்பாற்ற ஒவ்வொருக்கும் தலா ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago