காஞ்சி அருகே இறந்தவர்களை அடக்கம் செய்த பிறகு மனித எலும்புகளை விற்பதாக புகார்: கருணை இல்லம் திட்டவட்ட மறுப்பு

By அ.சாதிக் பாட்சா, கோ.கார்த்திக்

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத் தில் செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் எனும் பெயரில் இயங்கி வரும் கருணை இல்லம் மீது, அந்த பகுதி மக்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உத்திர மேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் கருணை இல்லம். கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இல்லத்தில் 180 முதியவர்கள், 15 பணி யாளர்கள் இருப்பதாக சொல் கிறார் அங்கு பணிபுரியும் திண்டுக் கல்லைச் சேர்ந்த ஆறுமுகம். மிகப் பிரமாண்டமான கட்டிடங் களில் இயங்கும் அந்த இல்லத்தின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்ள நேரில் சென் றோம். அங்குள்ள பணியாளர்கள் இல்லத்தில் நடக்கும் விஷயங் களை தெரிவிக்கவோ, நேரில் சுற்றிக் காட்டவோ மறுத்துவிட்டனர்.

இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.

பாலேஸ்வரம் கிராம மக்கள் இந்த இல்லத்தைப் பற்றி குறிப் பிடும்போது “சுமார் 60 வயதான மயில்சாமி என்கிற ஆதரவற்றவர் எங்கள் ஊரில் கிடைப்பதை சாப்பிட்டு வசித்து வந்தார். அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் இங்குள்ள சிலர் அவரை இந்தக் கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சேர்த்த 3-வது நாளில் அவர் இறந்துவிட்டதாகவும், அவரை அடக்கம் செய்துவிட்டதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். நல்ல உடல்வாகு கொண்ட மயில் சாமி அங்கு சேர்க்கப்பட்ட 3 நாளில் இறந்தது மர்மமாகவே உள்ளது. இங்குள்ள முதியவர்களுக்கு சரியான உணவு வழங்குவதில்லை. அதனாலேயே பலர் சீக்கிரம் இறந்துவிடுகின்றனர்” என்றனர்

இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சற்குணா கூறும்போது, ‘’இந்தக் கருணை இல்லம் மீது பல்வேறு புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டபோது சடலங்களை புதைப்பதில் பல்வேறு சந்தேகங் கள் எழுந்தது. இந்த இல்லத்தில் சில ஆவணங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நான் அறிக்கை சமர்பித்துவிட்டேன்’’ என்றார்.

இந்தக் கருணை இல்லத்தின் இயக்குநர் தாமஸ் ‘தி இந்து’-விடம் கூறும்போது,” நாங்கள் நடத்துவது இறக்கும்தறுவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லம். அதனால் இங்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இறந்தவர்களை கல்லறை கட்டி அடக்கம் செய்ய இடம் போதாது என்பதாலும், ரோமானிய காலத்து அறிவியல் முறையில் சடலத்தை மக்கச் செய்கிறோம். மேலும் எலும்புகளை சேகரித்து விற்பனை செய்வதாகச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. அதில் சிறிதும் உண்மையில்லை.

இதுபோல் சடலங்களை அழிக்க காவல்துறையின் அனுமதி பெற்றுள்ளோம். இப்படி சடலங்களை மக்கச் செய்வ தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் தயாராக இருக்கிறோம்.

எங்களுக்கு சொந்தமான இடத்தின் சில பகுதியை அங்குள்ள ஒரு முக்கிய பிரமுகர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். அதை மீட்கும் நடவடிக்கையில் நாங்கள் இறங்கியதால் அவர் சிலரைத் தூண்டிவிட்டு இப்படி எங்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்” என்றார்.

புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 secs ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்