இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் கப்பலில் கடத்திய ரூ.605 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்- பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் கைது

By செய்திப்பிரிவு

எஸ். முஹம்மது ராஃபி

கொழும்பிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் இந்தியப் பெருங்கடலில் கொடி இல்லாமல் பயணித்த வெளிநாட்டுக் கப்பலை இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான `சயுர' கண்டறிந்து அந்தக் கப்பலைச் சோதனையிட்டது.

அதில் `மெத்தம்பெட்டமைன்' என்ற போதைப்பொருள் 605கிலோ, `கெடமைன்' போதைப்பொருள் 579 கிலோ, 200 பாக்கெட் `பாபுல்' போதைமருந்து மற்றும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.605 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பறிமுதலான போதைப் பொருட்களில் மிகப் பெரிய எண்ணிக்கை இதுவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்