ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் களப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கும், வீடற்றோருக்கும் தடையின்றி உணவு கிடைப்பதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் இயங்கும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
“தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவங்களில் நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பேர் உணவருந்துவதாக, சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை ஆய்வு செய்த தமிழகமுதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ள நிலையில், பணியாளர் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக அம்மா உணவக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விருத்தாசலம் அம்மா உணவக பணியாளர்கள் கூறியது: அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பணியாற்றுகிறோம்.
பணியாளர் பற்றாக்குறையால் இருவேளை மட்டும் உணவு வழங்கி வந்த நிலையில், தற்போது3 வேளையும் உணவு வழங்க வேண்டியுள்ளது.
தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு கூடுதல் பணியாளர்களை நியமிக்க நகராட்சி நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட வேண்டும். 12 மணி நேரத்துக்கு மேலாக பணியாற்றும் எங்களுக்கு சிறப்பு ஊதியம், ஊக்கத்தொகை, பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து விருத்தாசலம் நகராட்சி ஆணையர்(பொ) பாண்டுவிடம் கேட்டபோது, “விருத்தாசலம் அம்மா உணவகத்தில் 12 பேர் பணிபுரிகின்றனர். நாளொன்றுக்கு ரூ.250 ஊதியம் வழங்கப்படுகிறது.
கூடுதல் பணியாளர்கள், ஊதியம் தொடர்பாக அரசு முறையான வழிகாட்டுதல் வழங்கினால் மட்டுமே பரிசீலிக்க முடியும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago