வேளச்சேரி பீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதிமுதல் 17 வரை சென்றவர்கள் கவனிக்கவும்: தகவல் கொடுக்க மாநகராட்சி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மார்ச் 10 முதல் மார்ச் 17 வரையிலான நாட்களில் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப் ஸ்டைல் கடைக்குச் சென்றவர்கள், அங்கு பணிபுந்தவர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளை அணுகவும் என்று சென்னை நகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.

பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி இந்த வேண்டுகோளை வைத்துள்ளது.

பீனிக்ஸ் மாலில் கேஷியராக பணியாற்றிய 25 வயதான பெண் அரியலூருக்கு சென்ற நிலையில் அங்கு மார்ச் 27 அன்று கரோனா தொற்று இருப்பதை அறிந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.அவருடன் பணியாற்றிய சென்னை இளைஞருக்கும் தொற்று ஏற்பட்டதை அடுத்து மார்ச் 31-ம் அவரும் திருவண்ணாமலையில் சிகிச்சையில் உள்ளார்.

இருவருமே பீனிக்ஸ் மாலில் பணிபுரிபவர்கள். இதையடுத்து மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டதை இதை அடுத்து பீனிக்ஸ் மால் தமிழக சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மாலில் பணிபுரிந்த அனைவரையும் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் மார்ச் 10 முதல் 17-ம் தேதிவரை பீனிக்ஸ் மாலுக்கு குறிப்பாக லைஃப் ஸ்டைல் கடைக்கு சென்று வந்தவர்கள் கவனமாக இருக்குமாறும், நோய் அறிகுறி ஏதாவது தெரிந்தால் உடனடியாக சேவை மையத்தை அழைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்