அத்தியாவசிய பயணத் தேவைக்கு இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்க தென்காசி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், பொதுமக்கள் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக பயணம் செய்யவும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இதற்கு, தென்காசி மாவட்ட நிர்வாகம் இளையதள பயண அனுமதிச் சீட்டு வசதியை செய்துள்ளது. 8099914914 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், கைப்பேசி எண்ணுக்கு ஒரு இணையதள முகவரி குறுந்தகவலாக வரும்.
அந்த இணையதள முகவரியில் கைப்பேசி எண்ணை பதிவு செய்தால், மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வரும். அந்த குறுஞ்செய்தியை பதிந்து, பயணம் குறித்த விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, இணையதள வாயிலாக இணையதளம் வாயிலாக பயண அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
மேலும், பயணச் சீட்டுக்கான அனுமதி குறித்த தகவல் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக வரும். அதில், அனுமதிச் சீட்டு செல்லத்தக்க காலம், நேரம், பயண விவரம், வாகன எண் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். சோதனைச்சாவடிகளில் காவல்துறையினர் சோதனை செய்யும்போது இந்த பயண அனுமதிச் சீட்டை காண்பிக்க வேண்டும்.
இது வணிகர்கள் தங்களது சரக்குகளை எடுத்து வரவும், பொதுமக்களின் அவசர பயணத்துக்கும் மட்டுமே வழங்கப்படும். இணையதள வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் தொடர்புடைய துறை அலுவலர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னரே மின் அனுமதிச் சீட்டு வழங்க இயலும்.
எனவே, 72 மணி நேரத்துக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். தவறான காரணங்களைத் தெரிவித்து பயணச் சீட்டு பெற முயற்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக மேலும விவரங்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் தங்கள் பகுதி வட்டாட்சியர்களை அணுகலாம். இந்த பயண அனுமதிச் சீட்டு பெறும் நடைமுறை இன்று தொடங்கியுள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago