மலேசியாவில் சிக்கியுள்ள 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்படுவார்களா?

By செய்திப்பிரிவு

மலேசியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உட்பட 2 ஆயிரம் இந்தியர்களை மீட்டு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு, உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவை ரத்து ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் திருமணம், சுற்றுலா, வேலை நிமித்தமாக ஆயிரம் தமிழர்கள் உட்பட 2 ஆயிரம் இந்தியர்கள் கடந்த மாதம் மலேசியாவுக்குச் சென்றனர். விமானச் சேவை ரத்தானதால் அவர்களால் இந்தியா திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மலேசியாவில் கரோனா பரவலைத் தடுக்க பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருப்பதால், 2 ஆயிரம் இந்தியர்களுக்கும் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மலேசியா நாட்டினரை அழைத்துச் செல்ல மலேசியா அரசு ஏப்.1, 2, 4 ஆகிய தேதிகளில் விமானம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த விமானங்களில் தங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்தி யர்களின் கோரிக்கையை இந்திய அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உறவினர் திருமணத்துக்காக மலேசியா சென்று திரும்பி வர முடியாமல் சிரமப்படும் சிவகங்கை மாவட்டம், இளை யான்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு நகரத் தலைவர் அம்பலம் ராவுத்தர் நெயினார், தங்களை இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச கத்திடம் பேசி, மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கார்த்தி சிதம்பரம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE