குமரியில் ஊரடங்கால் அறுவடை செய்ய முடியாமல் அழியும் தருவாயில் 500 ஏக்கர் நெற்பயிர்கள்: ஒற்றை ஆளாய் அறுவடை செய்து கரைசேர்க்கும் வயதான விவசாயிகள்

By எல்.மோகன்

குமரி மாவட்டத்தில் ஊரடங்கால் அறுவடை இயந்திரம், மற்றும் ஆள் இன்றி அறுவடை செய்ய முடியாமல் அழியும் தருவாயில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் உள்ளன.

நெல்மணிகள் வீணாவதைப் பார்த்து பல வயதான விவசாயிகள் வயல்களில் இறங்கி ஒற்றை ஆளாய் அறுவடை செய்து நெற்பயிர்களை கரைசேர்க்கும் பரிதாபம் நிகழ்ந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6500 ஹெக்டேர் வயல்பரப்புகளில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போகங்களில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. கும்பப்பூ சாகுபடி அறுவடை பணி நிறைவடையும் தருவாயை எட்டியபோது கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

இதனால் கும்பப்பூவில் தாமதமாக நடவு செய்யப்பட்டிருந்த பயிர்களில் 500 ஏக்கருக்கு மேல் அறுவடை ஆகாமல் வயல்பரப்பிலே காய்ந்து நெல்மணிகள் உதிர்ந்து வீணாகி வருகின்றன.

அறுவடை பணிக்காக ஏற்கெனவே மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்களுடன் வந்த தொழிலாளர்கள், தொடர்ந்து பணியை மேற்கொள்ள முடியாமலும், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இரணியல், தேரூர், சுசீந்திரம் பகுதிகளில் ஊரடங்கால் அறுவடை ஆகாத 500 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் வீணாவதை பார்த்த விவசாயிகள் பேரிழப்பு ஏற்பட்டு கவலையுடன் காணப்படுகின்றனர்.

அறுவடைக்கு இயந்திரமும் கிடைக்காமல், ஆட்களும் பணிக்கு வராத நிலையில் வயதான விவசாயிகள் பலர் தாமாக முன்வந்து வயல்வெளியில் அறுவடை பணியை தன்னம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர்.

ஒற்றை ஆளாக நெற்பயிர்களை அறுத்து வயல்பரப்பில் போட்டு, முடிந்தவரை கிடைக்காமல், ஆட்களும் பணிக்கு வராத நிலையில் வயதான விவசாயிகள் பலர் தாமாக முன்வந்து வயல்வெளியில் அறுவடை பணியை தன்னம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர்.

ஒற்றை ஆளாக நெற்பயிர்களை அறுத்து வயல்பரப்பில் போட்டு, முடிந்தவரை அவற்றை கரை சேர்க்கின்றனர். இது வயதான விவசாயிகளின் தன்னம்பிக்கையையும், உழைப்பையும் வெளிப்படுத்தியது.

இதுகுறித்து இரணியல் நல்லிகுளம் ஏலாவில் தனி ஆளாக நின்று அறுவடை பணியை மேற்கொண்ட ராஜையன்(87) என்ற விவசாயி கூறுகையில்; ஊரடங்கு முடிந்த பின்னர அறுவடை செய்யலாம் என காத்திருந்தால், அனைத்து நெல் மணிகளும் உதிர்ந்து விடும்.

நல்ல விளைச்சல் அடைந்த நெற்பயிர்களை அப்படியே விட்டுவிட மனமில்லை. இதனால் தான் உடல் ஒத்துழைக்காவிட்டாலும் சிறிது சிறிதாக நெற்பயிர்களை அறுத்து முடிந்தவரை கரேசேர்த்து வருகிறேன். உதவிக்கு எனது மனைவி, மக்களையும் வரவழைத்து 4 நாட்களிலாவது பயிர்களை அறுவடை செய்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்