ஓசூரில் பயணிகள் கூட்டத்தில் மினிலாரி புகுந்து விபத்து: 3 பேர் பலி

By எஸ்.கே.ரமேஷ்

ஓசூரில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயணிகள் கூட்டத்தில் மினிலாரி புகுந்ததில் 3 பேர் பலியாகினர். போக்குவரத்தை சீர் செய்த எஸ்ஐ உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இரவு 12.30 மணியளவில் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு, மீண்டும் திருவண்ணாமலை நோக்கி சென்றது. பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இரவு 1 மணியளவில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சீதாராம்மேட்டை கடந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென பேருந்தில் டயர் பஞ்சரானது.

இதையடுத்து மாற்று பேருந்தில் செல்ல பயணிகள் அனைவரும், பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். அப்போது, அதே சாலையில் காரும், இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதனையறிந்த அட்கோ உதவி காவல் ஆய்வாளர் லோகநாதன், விபத்தில் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார். இதனை பயணிகள் சிலர் அருகில் நின்று பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது, ஓசூர் - கிருஷ்ணகிரி நோக்கி மாதுளம்பழம் ஏற்றிக் கொண்ட சென்ற மினி லாரி அதிக வேகமாக சென்றது கொண்டிருந்தது. கட்டுபாட்டை இழந்த மினிலாரி பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் விழுப்புரம் மாவட்டம் குந்தலப்பள்ளியைச் சேர்ந்த காசி என்பவரது மகன் தினேஷ்குமார் (19), திருவண்ணாமலை மாவட்டம் மூங்கில்துரைபட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மகன் வெங்கடேஷ் (34), மற்றும் பெயர், விலாசம் தெரியாத ஒரு ஆண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த எஸ்ஐ லோகநாதன், நடத்துனர் முருகன்,பெங்களூர் கார்த்திகேயனி, திருவண்ணாமலை மாயன், ஞானப்பிரகாசம் (35) உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த ஓசூர் ஏஎஸ்பி ரோகிணிபிரியதர்ஷனி, இன்ஸ்பெக்டர்கள் தாமரைச்செல்வன் (அட்கோ), சுப்பிரமணியன் (சிப்காட்) மற்றும் போலீஸார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி ஓட்டுநரான ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஓசூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்