குமரி மாவட்டம் இரணியலில் 87 வயது விவசாயி ஒருவர் தனது வயலில் ஒற்றை ஆளாய் அறுவடை செய்து நெற் கதிர்களை கரைசேர்த்து வருகிறார்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6,500 ஹெக்டேரில் தாமதமாக நடவு செய்யப்பட்டிருந்த 500 ஏக்கரில் நெற்கதிர் அறுவடை ஆகாமல் நெல்மணிகள் உதிர்ந்து வீணாகி வருகின்றன.
மதுரை, திருச்சி பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங் களுடன் வந்த தொழிலாளர்கள், தொடர்ந்து பணியை மேற் கொள்ள முடியாமலும், சொந்த ஊர்களு க்குச் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். மாவட்டத்தில் இரணியல், தேரூர், சுசீந்திரம் பகுதி வயல்களில் நெற்பகதிர் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இரணியல் நல்லிகுளம் ஏலா பகுதியில் தனி ஆளாக நின்று தனது வயலில் அறுவடைப் பணியை மேற்கொண்ட ராஜையன் (87) கூறியதாவது:
ஊரடங்கு முடிந்த பின்னர் அறுவடை செய்யலாம் எனக் காத்திருந்தால், அனைத்து நெல் மணிகளும் உதிர்ந்து விடும். நல்ல விளைச்சல் அடைந்த நெற்கதிரை அப்படியே விட்டுவிட மனமில்லை. இதனால்தான் உடல் ஒத்துழைக்காவிட்டாலும் சிறிது சிறிதாக நெற்கதிரை அறுத்து முடிந்தவரை கரைசேர்த்து வருகி றேன். உதவிக்கு எனது மனைவி, மக்களையும் வரவழைத்து 4 நாட் களிலாவது கதிர்களை அறுவடை செய்து விடுவேன் என்றார். எல்.மோகன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago