தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 1 லட்சம் வீடுகளில் கரோனா வைரஸ் ஆய்வு: சுகாதாரத் துறை தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதான நபர் உயிரிழந்தார். இந்நிலையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையை சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் எடுத்துள்ளார். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்ய சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இதையடுத்து, கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ கல்லூரிகளின் முதல்வர் களுடன் ஆலோசனை நடத்தப் பட்டது.

சுகாதார குழுக்கள் வீடு வீடாகச் சென்று இருமல், காய்ச் சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறியும் பணிகளை மேற்கொண்டனர். நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த நபர் யாரேனும் இப்பகுதிக்குள் இல்லை என்றால், அவர் எங்கு உள்ளார் என்பதை கண்ட றிந்து தனிமைப்படுத்த அறிவுறுத் தப்பட்டனர்.

அந்த வகையில் இதுவரை 12 மாவட்டங்களில் 2,271 பணி யாளர்கள் மூலம் கணக்கெடுக் கும் பணி நடந்துள்ளது. இதில், 1,08,677 வீடுகளில் இருந்த 3,96,147 நபர்களிடம் ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்