மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்குநேரடியாக சென்று உடல் இயக்கமருத்துவ சேவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று உடல் இயக்க மருத்துவத்தை பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாற்றுத் திறனாளிகள் தங்களது வீடுகளில் இருந்து வெளியே சென்று உடல் இயக்க மருத்துவத்தை பெற முடியவில்லை. இதனால், உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.
இதற்கு தீர்வு காண தமிழகம்முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள்தோறும் நேரில்சென்று உடல் இயக்க மருத்துவத்தை வழங்க தமிழ்நாடு பிசியோதெரபிஸ்ட் கவுன்சிலுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பிசியோதெரபிஸ்ட் கவுன்சில் தலைவர் பி.முருகன் கூறியதாவது:
மாற்றுத் திறனாளி அல்லாத பிற நபர்களுக்குகூட தொடர்ந்து வீட்டிலேயே இருக்கும்போது உடல்இயக்கங்கள் பெரிதாக செயல்படாத காரணத்தால் உடல் பருமன்,தசை பாதிப்புகள் போன்றவை காணப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தசை வலி ஏற்படும்.
இதிலிருந்து விடுபட உடல் இயக்க மருத்துவ சேவை பயனுள்ளதாக இருக்கும். எனவே, உடல் இயக்க மருத்துவம் என்பது அவர்களுக்கு இன்றியமையாதது.
எனவே, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் உத்தரவின் பேரில் மாவட்டந்தோறும் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்களின் பெயர், தொலைபேசி எண்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் 9840243534, திருவள்ளூர் 9994606140, காஞ்சிபுரம் 7010340650 உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் மருத்துவர்களின் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றை தொடர்பு கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு தொலைபேசி வழியாகவும், வீடியோ அழைப்பின் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கப்படும். மருத்துவ உதவிதேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடியாக வீட்டுக்கு சென்று மருத்துவம் அளிக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு தசை இயக்கம் மற்றும் நுரையீரல் இயக்கபயிற்சி, சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, தசை இயக்கம், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நடப்பதற்கான பயிற்சி உட்பட 21 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago