தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த உத்தரவுகளை மீறி தொடர்ந்து மக்கள் வெளியே நடமாடி வருகின்றனர். குறிப்பாக இருச்சக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித் திரிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி இருச்சக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித் திரிவோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை வரை மொத்தம் 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பாக 351 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 229 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago