கரோனா அச்சத்தையும் மீறி விபத்தில் காயமடைந்த முதியவருக்கு உதவிய தொழிலதிபர் 

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கரோனா அச்சத்தையும் மீறி விபத்தில் காயமடைந்த முதியவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து தனது வாகனத்திலேயே மருத்துமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்த தொழில் அதிபரை அனைவரும் பாராட்டினர்.

காரைக்குடி அருகே அரியக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (78). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் 100 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற விபத்துக்குள்ளாகினார்.

அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலனசிற்கு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமான நிலையில் அவ்வழியாக தொழிலதிபர் பாண்டியராஜன் காரில் சென்றார்.

காயமடைந்தவரை பார்த்ததும், காரில் இருந்து இறங்கிய பாண்டியராஜன், தனது காரில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ்சிற்காக காத்திருக்காமல் தனது வாகனத்திலேயே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். தொழிலதிபர் மனித நேயத்துடன் செய்த உதவியை அப்பகுதி மக்கள் பாராட்டினர் .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்