தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடல்: தமிழகத்தில் 4,500 மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்தது

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

நாடெங்கும் ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் 4,500 மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி மின்சார உபயோகம் அதிகரித்துள்ளது.

ஆனால், அதேவேளை தொழி ற்சாலை, வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாநிலத்தில் ஒட்டுமொத்த மின்சார நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதி காரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஊரடங்குக்கு முன்பு 14,500 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. தற்போது 4,500 மெகாவாட் தேவை குறைந்து 10 ஆயிரம் மெகாவாட் மட்டுமே தேவைப்படுகிறது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கரோனா தடுப்பு நடவடிக் கையில் உள்ள அரசு மருத்து வமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு எக்காரணம் கொண்டும் மின்தடை ஏற்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள் ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்