சிவகங்கை மாவட்டத்தில் உணவின்றி தவிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், ஆதரவற்றோருக்கு போலீஸார் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.
காரைக்குடியில் 200-க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கபிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து வடமாநிலத் தொழிலாளர்களுக்கு காரைக்குடி டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் கோதுமை மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினர்.
» சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் உக்கடம் மீன் மார்க்கெட் மூடல்; கோவை மாநகராட்சி நடவடிக்கை
சிவகங்கை அருகே மதகுபட்டி பகுதியில் உணவின்றி தவித்த தொழிலாளர்கள், மனநிலை பாதித்தோருக்கு மதகுபட்டி போலீஸார் உணவு வழங்கினர்.
சிவகங்கை நகரில் உணவின்றி தவித்த தொழிலாளர்கள், ஆதரவற்றோருக்கு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீஸார் உணவு வழங்கினார். மேலும் அவர்கள் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினர்.
அதேபோல் சிவகங்கை பகுதியில் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் மணி, சித்த மருத்துவர் காந்திநாதன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.
மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் உணவின்றி தவிப்போருக்கு உதவி செய்து வருகின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உணவின்றி தவிப்போருக்கு போலீஸார் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago