திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதித்து சாலையோரம் இருந்தவர்கள் 60 பேரை மீட்கப்பட்டனர். அவர்களை மனநலகாப்பகம் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அவர்களுக்கான உணவை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உறுதி செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு உணவின்றி தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் தேடிக் கண்டுபிடித்து அவர்களைக் காப்பகத்தில் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமையில் இப்பணியை அலுவலர்கள் செய்துவருகின்றனர்.
முதற்கட்டமாக நிலக்கோட்டை வட்டார பகுதியில் சாலையோரங்களிலும் தங்கியிருந்த 45-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மனநலகாப்பகத்தில் சேர்த்தனர். இவர்கள் பசியின்றி இருக்க உணவு வழங்குவதை உறுதி செய்தனர்.
» மக்கள் கூடுவதைத் தவிர்க்க மதுரையில் நடமாடும் காய்கறிக் கடைகள் தொடக்கம்
» கரோனா பரவலைத் தடுக்க 24 மணி நேரமும் ஒலிக்கும் கடல் ஓசை சமுதாய வானொலி
இதையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்டவர்களை மீட்டு வாகனத்தில் அழைத்துவந்து மனநலகாப்பகத்தில் சேர்த்தனர். ஆதரவற்றவர்களை தனியாக காப்பகத்தில் சேர்த்து தினமும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தனர்.
நடமாடும் அரசு மருத்துவமனை வாகனம் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கின்றனர்.
இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago