தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப் பட்டியில் கரோனா சிகிச்சைக்காக 2 மையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகி றது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை தொடர் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 106 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 73 பேர் சிகிச்சை பெற்று, வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். 33 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேற்கிந்தியத் தீவிலிருந்து வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு மாவட் டத்திலும் கரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் கொண்ட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோல, செங்கிப்பட்டியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் சிகிச்சை மையம் அமைப்பதற்கான நடவடிக் கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள் ளது.
இதில், 1,000 படுக்கைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செங்கிப்பட்டியிலும் டி.பி. சானிட்டோரியத்திலும் கரோனா சிகிச்சை மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
கும்பகோணத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளவரின் வீடு உள்ள பகுதிக்கு யாரும் செல்லாத வகையிலும், பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத வகை யிலும், வீட்டுக்குள் யாரும் செல்லாத வகையிலும், தெருவின் இரு பகுதி நுழைவுவாயில்களும் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித் துள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் வீடு உள்ள தெருவில் இருக்கும் 62 வீடுகளுக்கும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீட்டை மைய மாகக் கொண்டு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுவில் உள்ள வீடுகளில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதா என ஆய்வு மேற் கொள் ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட செவிலியர்கள்
கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன் சளி, இருமல் தொந்தரவு காரணமாக கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த 5 செவிலியர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே தெருவில் வசிக்கும் 75 வயது மூதாட்டி சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago