மதுரையில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு உதவ வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கரோனா உதவிக்குழு அமைத்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை தன்னார்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் கூறியதாவது:
மதுரையில் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் கரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல சிரமங்களை சந்திக்கின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என 21 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு மக்கள், தொழிலாளர்களுக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ், உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்வது, தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்வது, சட்டவிரோதமாக கடன் தவணையை கட்டச்சொல்லி மக்களை மிரட்டினால் சட்ட உதவி வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
இந்தக்குழு கைபேசி, வாட்ஸப், பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக இயங்கும். தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற குழு அமைக்கப்படும்.
இவ்வாறு வாஞ்சிநாதன் தெரிவித்தார்.
இந்த குழுவை வழக்கறிஞர் ராஜேந்திரன், ரபீன் ஆகியோரின் 98421 59078, 99440 97595 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago