ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்ஏஎச்ஏஏ) அவசர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கே.பி.தியாகராஜன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு மாதச்சம்பளமோ, நிரந்தர வருமானமோ கிடையாது. நீதிமன்றங்களுக்கு சென்றால் மட்டுமே வருவாய் கிடைக்கும். இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வழக்கறிஞர்கள் தொழில் முடங்கியுள்ளது.
இதனால் வழக்கறிஞர்கள் வருவாய் இல்லமல் அத்தியவாசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வரும், சட்ட அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago