அவசர தேவைக்காக செல்வோருக்கு இ-ஐ.டி கார்டு வழங்கப்படுமா?

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள இந்நேரத்தில் அவசரத் தேவை, மருத்துவமனைகளுக்குச் செல்பவர்களுக்கு புதுடெல்லியில் வழங்கப்படுவதுபோல, மின்னணு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். காந்தி கூறியதாவது: ஊரடங்கால் மருத்துவமனை களுக்கு கரோனா தவிர்த்து பிற அவசர சிகிச்சைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. கைது செய்யப்படுவோருக்கு உடன டியாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய வழக்கறிஞர்களும் செல்ல முடியவில்லை. இது தொடர்ந்தால் அடுத்து வரும் நாட்களில் மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

ஆகவே, புதுடெல்லி யில் அமல் படுத்தியது போல, அத்தி யாவசியப் பணி கள் மற்றும் சிகிச்சைகளுக்குச் செல்வோருக்கு மின்னணு அடை யாள அட்டைகளை வழங்கும் முறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அடையாள அட்டையை மக்கள் அவசர காலத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கி. மகாராஜன்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்