கரோனா வைரஸ் காரணமாக நேரடி சந்திப்புக்கு தடை விதித்துள்ளதால் கைதி களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செல்போன் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேச அனுமதி அளித்து சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கோவை, புழல்-2 ஆகிய மத்திய சிறைகளுக்கு தலா 8 செல்போன்கள், திருச்சி, மதுரை மத்திய சிறைகளுக்கு தலா 6 செல்போன்கள், புழல்-1, பாளையங்கோட்டை, கடலூர், வேலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளுக்கு தலா 5 செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரையிலுள்ள பெண்கள் தனிச் சிறைகளுக்கு தலா ஒரு செல்போன் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கைதிகள் ஏற்கெனவே அளித்துள்ள எண்களுக்கு மட்டுமே பேச முடியும். புதிதாக சிறைக்கு வந்துள்ள கைதிகள் மற்றும் ஏற்கெனவே செல்போன் எண்களை அளிக்காத நபர்கள், தற்போது தங்களது குடும்பத்தினர் 3 பேரின் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேசலாம். எவ்வித கட்டணமும் இல்லை. எந்த எண்ணில், யாருடன், எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என பதிவேடு பராமரிக்கப்படுகிறது என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago