கரோனோ தொற்று பாதிப்பு காரணமாக நாடெங்கும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மே 3-ம் தேதி நடக்கவிருந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தனிமைப்படுதல் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
சமுதாய தனிமையை வலியுறுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாடெங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாகவும், சில மாநிலங்களில் பாதி நடந்த நிலையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்கவாய்ப்பில்லை.
இந்நிலையில் நாடெங்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்துவது இயலாத காரியம் என்பதாலும், பிளஸ்டூ தேர்வு நடத்தி அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின்னரே அது நடத்த முடியும் என்பதாலும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே - 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago