தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் முடங்கிய மக்களுக்கு ரேஷன்கடைகள் மூலம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் உயரதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000-ம், ஏப்ரல் மாதத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை இலவசமாக வழங்கவும் வழங்கப்பட உள்ளது.
மேலும் கூட்டுறவு, உணவு வழங்கல், வருவாய், ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளை பயன்படுத்தி மக்கள் கூட்டம் கூடாமல் தடையின்றி நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவுத் துறையில் 68 சார்-பதிவாளர்களுக்கு துணை பதிவாளர்களாக பதவி உயர்வு அளித்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் 9 துணை பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் கூட்டுறவு உயரதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
வட்ட அளவில் பொதுவிநியோகத் திட்டத்தை கவனிக்க ஒன்று முதல் 2 சார்-பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கண்காணிக்கும் கள அலுவலர்களாகவும் சார்-பதிவாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு ரேஷன்கடைகள் குறித்த விபரம் தெரியும். தற்போது நிவாரண உதவிகள் தடையின்றி வழங்க பிற துறை அதிகாரிகளை ஈடுபடுத்த உத்தரவிட்டநிலையில், கூட்டுறவுத்துறை அதிகாரிகளை திடீரென இடமாற்றம் செய்தது உயரதிகாரிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
பதவி உயர்வு அளித்தாலும் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு இடமாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago