கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவை என்ற பெயரில் வெளியில் வாகனங்கள், ரோடுகளில் சுற்றுவோரிடம் போலீஸார் எச்சரிக்கை செய்து, அனுப்புகின்றனர்.
ஆனாலும், பலர் ஊரடங்கு உத்தரவின் உண்மை நிலை புரியாமல் வெளியே உலா வருகின்றனர். அவ்வாறு வருவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
பொய்க்காரணம் கூறி சுற்றினால் மோட்டார் வாகனச் சிறப்பு சட்டப்பிரிவில் வழக்கு பதிந்து ரூ.500 அபராதம் வசூலிக்கின்றனர்.
மதுரை நகரிலும் இந்த நடவடிக்கை தொடர்கிறது. நகரில் 27 இடங்களில் போக்குவரத்து போலீஸார் சாலைகளில் தடுப்பு வேலிகளை ஏற்படுத்தி தேவையின்றி செல்வோரை கட்டுப்படுத் துகின்றனர்.
சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸாரும் தொடர்ந்து கூட்டம் கூடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்கின்ற னர்.நேற்று வரை மோட்டார் வாகனச் சிறப்பு சட்டத்தில் 79 வழக்கும், பிற விதிமீறல் தொடர்பாக 419 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 297க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பேரிடம் மேலாண்மை சிறப்பு சட்டத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விதிமீறல்களுக்கென ரூ. 1,22,100க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என, போலீஸார் எச்சரித்துள்ளனர்.
நகர் போக்குவரத்து துணை காவல் ஆணையர் சுகுமாறன் கூறியது: ஊரடங்கு உத்தரவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கரோனா வீபரிதம் அறிந்தே செயல்படுகிறோம். ஊரடங்கு பிறபித்து, 3 நாளுக்கு மேலாகியும் மக்கள் வெளியில் வருவது நிறுத்தவில்லை.
வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. பொய்யான காரணம் சொல்லி சுற்றினால் மோட்டார் வாகன சிறப்புச் சட்டத்தில் (279 என்ஏ சட்டம்) ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
அத்தியாவசியப் பணிக்கு செல்வோருக்கு அவரவர் துறை சார்ந்த வாகன ஏற்பாடு செய்யலாம். அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு வாகனம் இயக்கப்படுகிறது.
இதை தவிர்த்து, அத்தியாவசிய பணியாளர்கள் வாடகை வாகனங்களில் செல்வது தொடர்ந்தால் மேலும், சிலர் அக் காரணத்தை கூறி வாடகை வாகனங்களில் வருவது தொடரும்.
இருப்பினும், அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே வாடகை வாகனத்தில் சென்றால் அனுப்பச் சொல்வோம். தயவு கூர்ந்து போலீ ருக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago