சென்னையில் ஊரடங்கு உத்தரவை மதித்து சமூக விலகலை மதிக்காமல் எனக்கென்ன என்று தேவையின்றித் திரிந்ததாக, சென்னை முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சமுதாயப் பரவல் வந்துவிடாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. 21 நாள் சமூகத் தனிமையைக் கடைப்பிடிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், வழக்கம்போல் சிலர் அரசின் உத்தரவை அலட்சியம் செய்து வீதிகளில் சாலைகளில் வாகனங்களில் சுற்றுவதால் போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்திருந்தனர். நேற்று தமிழகம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்றும் அலட்சியமாக உலா வந்த பலர் மீது தமிழகம் முழுவதும் போலீஸார் பலவேறு வழக்குகளைப் பதிவு செய்தனர்.
சென்னையிலும் நேற்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்தும் மீறி நடந்ததாக 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை போலீஸார் வெளியிட்டுள்ள தகவல்:
"கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 CRPC- ன் கீழ் தடையை மீறுபவர்களைக் கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டும், சோதனைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்தும் வருகின்றனர்.
மேற்படி 144 CRPC நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 156 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (26.03.2020) மாலை 6 மணி முதல் இன்று (27.03.2020) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இதில் தொடர்புடைய 36 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், போக்குவரத்து காவல் துறையினர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 3 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 158 வழக்குகளும் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 130 வழக்குகளும் என மொத்தம் 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன".
இவ்வாறு சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago