மதுரையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் சிலம்பு மாஸ்டர்

By கி.மகாராஜன்

மதுரையில் ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் தவிக்கும் வீடற்ற ஆதரவற்றவர்களுக்கு சிலம்பம் மாஸ்டர் ஒருவர் தினமும் இலவசமாக உணவுப் பொட்டலம் வழங்கி வருகிறார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. நேற்று இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். இதனால் ஊரடங்கின் 2-வது நாளான இன்று மதுரையில் ஆள் நடமாட்டம் சுத்தமாகக் குறைந்திருந்தது.

இந்த ஊரடங்கு உத்தரவால் மதுரையில் வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள் உணவுக்குத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களில் உணவைப் பார்சலாக வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் தொண்டு நிறுவனத்தினர் தங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவற்றோர்கள் பசியாற்றி வருகின்றனர்.

மதுரை திருப்பாலையைச் சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் சண்முகவேல், ஊரடங்கு உத்தரவால் சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். சிம்மக்கல் பாலம், கே.கே.நகர், பீ.பீ.குளம் பகுதிகளில் சாலையோரம் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நேற்று உணவுப் பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார்.

இது குறித்து சண்முகவேல் கூறுகையில், ''உணவு வழங்குவதை சில இடங்களில் போலீஸார் தடுக்கின்றனர். உணவுப் பொட்டலங்களைத் தங்களிடம் கொடுத்துச் செல்லுமாறும், நாங்கள் கொடுத்துவிடுகிறோம் எனவும் தெரிவிக்கின்றனர். ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதை போலீஸார் தடுக்கக்கூடாது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்