கோவையில் வீடற்ற ஆதரவற்றவர்களுக்கு தீயணைப்புத் துறையினர் உணவு வழங்கினர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, சாலையோரங்களில் தங்கியுள்ள ஆதரவற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தீயணைப்புத் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன் பேரில், கோவை மாவட்டத் தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், 12 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த நிலைய அலுவலர்கள், வீரர்கள் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றைத் தயாரித்து வாளியில் எடுத்துச் சென்று, தங்களது பகுதிகளில் உள்ள வீடற்ற, சாலையில் தங்கியுள்ள ஆதரவற்றவர்களுக்கு இன்று (மார்ச் 26) காலை முதல் வழங்கி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மசக்காளிபாளையத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த பீளமேடு தீயணைப்பு அலுவலர் முத்துகுமாரசாமி கூறும்போது, "எங்களது நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரத்தில் தங்கியுள்ள ஆதரவற்றவர்கள் 15-க்கும் மேற்பட்டோருக்கு இன்று உணவு வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். வாளியில் வைத்து உணவை எடுத்துச் சென்று, பாக்குமட்டையில் வைத்து அவர்களுக்கு வழங்குகின்றோம். குடிநீர் பாட்டிலும் வழங்குகிறோம்" என்றார்.
» வீண் வதந்திகளை நம்பி கரோனாவை வேடிக்கையாகவோ, அலட்சியமாகவோ கருத வேண்டாம்; சரத்குமார் வேண்டுகோள்
அதேபோல், கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு மேக்ஸிகேப் மற்றும் டூரிஸ்ட் கார் ஓட்டுநர்கள், பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago