இலவச ரேஷன் பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

By கல்யாணசுந்தரம்

ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக் களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் தலா ரூ.1,000 ரொக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.

ரேஷன் கடைகளில் கும்பலைத் தவிர்க்கும் வகையில் இந்த பொருட்கள் ஏப்.1-ம் தேதி முதல் டோக்கன் முறையில் பொதுமக்களுக்கு விநியோகிக் கப்படும் என அரசு தெரிவித் துள்ளது.

இவற்றை வீடுகளுக்கே சென்று வழங்கினால் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ரங்கம் முருகேசன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

டோக்கன் பெறுவதற்காகவும், பொருட்களை பெறுவதற்காகவும் ரேஷன் கடைகளில் கூடும் கூட் டத்தை தவிர்க்க இந்த பொருட் களை வாகனங்கள் மூலம் தெருக்கள் தோறும் கொண்டு சென்று ஒவ்வொரு வீடாக விநியோகிக்கலாம்.

இல்லையேல், ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு இந்த பொருட்களை வழங்க முடியுமோ அவர்களின் செல்போன் எண்களுக்கு, வழங்கப்படும் நாள், நேரத்தைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பி வரவழைத்து வழங்கலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்