வருவாய்த் துறை சார்பில் நடவடிக்கை: வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டறியும் பணி தீவிரம்- அமைச்சர் உதயகுமார் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைந்திருக்கும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், தமிழகத்தில் உள்ள 37 வருவாய் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீதுஎடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதற்குஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊரடங்கு உத்தரவு குறித்து எடுத்துச் சொல்லும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள சந்தையில் அதிகளவு மக்கள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு, சந்தையில் மக்கள் கூடாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் அவற்றை கொண்டு செல்லும் பணியாளர்கள் செல்வதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையானவர்களுக்கு உணவு வழங்க, சமுதாய சமையலறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை கண்டறியும் பணியிலும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் வீட்டில் இருந்தே சுய தனிமை, சமூக இடைவெளியை பின்பற்றிகரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்