புதுச்சேரியில் 9 துறைகளைத் தவிர்த்து இதர அரசுத் துறைகளுக்கு 21 நாட்களுக்கு விடுமுறை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் 9 துறைகளைத் தவிர்த்து இதர அரசுத் துறைகளுக்கு 21 நாட்களுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசுத் துறைகளுக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நிதித்துறை, கருவூலகம், உள்ளாட்சி, நலவழி, காவல், மின் துறை, தீயணைப்பு மற்றும் பொதுப்பணி தவிர அனைத்து அரசுத் துறைகளுக்கும் 21 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பிறப்பித்த உத்தரவில், "அரசுத் துறைகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், விடுமுறை அளிக்கப்பட்ட துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே துறை சார்ந்த முக்கியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பால், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், காய்கறிகள் மற்றும் சானிடைசர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் தடைபடாது. ஏனைய வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 21 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆணை விரைவில் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்