தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை ஒவ்வொருவரும் அதிகளவு வாங்கியதால் அவை கடைகளில் விற்றுத்தீர்ந்தன.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே மளிகை மற்றும் காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது. தடை உத்தரவால் காய்கறிகளுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசியமான காய்கறிகளை வாங்கிக் குவித்தனர். மளிகைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பல்பொருள் அங்காடி
கள் வழக்கமாக திறக்கும் நேரத் தைவிட நேற்று முன்னதாகவே திறக்கப்பட்டன. அரிசி, பருப்பு,புளி உள்ளிட்ட மளிகை பொருட்
களை மக்கள் அதிகளவு வாங்கினர். இதனால், பல்பொருள் அங்காடிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறு கடைகள், மொத்தசில்லறை விற்பனை கடைகளிலும் நேற்று நாள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அடுத்த ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை பொருட்களை பலரும் வாங்கி சென்றனர். இதனால், நேற்று நாள் முழுவதும் உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், தாம்பரம், பல்லாவரம், பொத்தேரி, குரோம்
பேட்டை, திருவொற்றியூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்தே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி குவிக்கத் தொடங்கினர்.
கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களாக மந்தமாக இருந்த முட்டை விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதனால், நேற்று முன்தினம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு முட்டையின் விலை நேற்று ரூ.4 முதல் ரூ.5 வரை விலை உயர்ந்தது. அதேபோல், காய்கறிகள் வாங்கவும் மார்க்கெட்களில் கூட்டம் அலை மோதியது. இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், அவற்றின் விலையை பலமடங்கு உயர்த்தி விற்றனர்.வெங்காயம், தக்காளி, உருளை போன்றகாய்கறிகளுக்கு மக்களிடையே அதிக தேவை இருந்தது. சில கடைகளில் இக்காய்கறிகள் காலை 11 மணிக்கே விற்றுத்தீர்ந்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago